Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ஊரகப் பகுதிகளை மேம்படுத்த…. ரூ.3,000 கோடி நிதி ஒதுக்கீடு…. அரசு புதிய அதிரடி…!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசே மிக சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகள் ஒவ்வொன்றும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அது மட்டுமல்லாமல் அவ்வப்போது மக்களை குளிர்விக்கும் வகையில் புதிய நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள ஊரகப் பகுதிகளின் தரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு பணிகளுக்கு தமிழக அரசு 3,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.

விவசாயிகள், விவசாய பொருட்களை சந்தைப்படுத்தவும், குக்கிராமத்தில் இருந்து பள்ளி, மருத்துவமனை சென்றடையவும் சாலை வசதி அமைக்கப்படுகின்றன. 2,750 கிலோமீட்டருக்கு ஓரடுக்கு கம்பி சாலைகள், 800 கிலோ மீட்டருக்கு சிமெண்ட் கான்கிரீட் சாலைகள், 800 கிலோ மீட்டருக்கு பேவர் பிளாக் சாலைகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

Categories

Tech |