தமிழகத்தில் வரும் 14-ஆம் தேதி காலை 6 மணி வரை மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது.
மளிகை, காய்கறி, மொத்த இறைச்சி கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பேருந்து போக்குவரத்திற்கு தடை நீடிக்கப்பட்டுள்ளது. தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்கு, காய்கறி, இறைச்சி மற்றும் மீன் காய்கறி பழம் மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.
மீன் சந்தைகள் இறைச்சி கூடங்களில் மொத்த விற்பனைக்காக மட்டுமே அனுமதிக்கப்பட்டு இருப்பதால் சிறு வணிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளார். கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் நோய் தொற்று அதிகமாக இருப்பதால் அங்கு மளிகை காய்கறி கடைகள் திறக்கப்பட்டாலும் தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்கள் வீட்டு பராமரிப்பு பிளம்பிங் எலக்ட்ரிகல் தச்சி வேலைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அனைத்து அரசு அலுவலகங்களும் 30% பணியாளர்களுடன் செயல்படவும், சார்பதிவாளர் அலுவலகங்கள் ஒரு நாளைக்கு 50 டோக்கன்கள் மட்டும் வழங்கப்பட்டு பத்திரப் பதிவுகள் மேற்கொள்ளவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. வாடகை வாகனங்கள், டாக்ஸிகள் மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் இ-பதிவுடன் செல்ல அனுமதிக்கப்படும். பேருந்துகளுக்கான தடை நீடிக்கப்பட்டுள்ளதோடு மறு உத்தரவு வரும் வரை டாஸ்மார்க் கடைகளை திறக்கவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.