Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ஊரடங்கு நீட்டிப்பு…. சற்றுமுன் முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி தமிழகத்திலும் ஜனவரி 10-ஆம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து ஊரடங்கு மேலும் நீடிப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில் தமிழகத்தில் ஜனவரி 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்க படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி வருகிற 14-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை கோவில்களை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த நாட்களில் பொது மக்கள் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.

மேலும் வருகின்ற 16ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். பொங்கல் சார்ந்த நடத்தக்கூடிய கலை நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பொங்கல் மற்றும் தைப்பூசம் நாட்களில் கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. பேருந்துகளில் 75% பயணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய காரணங்களுக்காக மட்டுமே வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும். பொது இடங்களுக்குச் செல்லும்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளன.

Categories

Tech |