தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று பரவல் அதிவேகமாக பரவி வந்தது. இதனையடுத்து முதல்வர் முக.ஸ்டாலின் இரவு நேர ஊரடங்கு, வார கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தினார். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் ஊரடங்கு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் ஊரடங்கு தொடர்பான அறிவிப்புகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதாவது
# தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் திறப்பு.
# இரவு நேர ஊரடங்கு நாளை முதல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
# வரும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கிடையாது.
# கொரோனா பாதுகாப்பு மையங்களாக செயல்படும் கல்லூரிகள் தவிர்த்து மற்ற அனைத்து கல்லூரிகளும் பிப்ரவரி 1ம் தேதி முதல் செயல்பட அனுமதி.
தொடரும் கட்டுப்பாடுகள்:
# சமுதாய, கலாச்சார அரசியல் கூட்டங்கள் போன்ற மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தடை தொடரும் என்று அரசு அறிவித்துள்ளது.
# நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவது குறித்து மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படும்.
மழலையர் விளையாட்டு பள்ளிகள், நர்சரி பள்ளிகள் செயல்பட அனுமதி இல்லை.
# பொருட்காட்சிகள், அரசு மற்றும் தனியாரால் நடத்தப்படும் அனைத்து கலை விழாக்களுக்கும் அனுமதி மறுக்கப்படுகிறது.
# ஓட்டல் கட்டுப்பாடு தொடரும்.
# உணவகம், விடுதிகள், பேக்கரிகள், அடுமனைகளில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து சாப்பிட அனுமதி.
# திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் அதிகபட்சமாக 100 பேருக்கு மட்டுமே அனுமதி.
# இறப்பு சார்ந்த நிகழ்வுகளுக்கு அதிகபட்சமாக 50 பேருக்கு மட்டுமே அனுமதி.
சினிமா, தியேட்டர் கட்டுப்பாடு தொடரும்
சினிமா தியேட்டர்களில் அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் 50 சதவீத பார்வையாளர்களுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
# துணிக்கடைகள் மற்றும் நகைக்கடைகளில் ஒரே நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்களுக்கு மிகாமல் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
# கேளிக்கை விடுதி, உடற்பயிற்சி கூடங்களில் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி.
#அழகு நிலையங்கள், முடி திருத்தகங்கள் ஒரே நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி.
கொரோனா தொற்று பரவல் தடுப்பு கட்டுப்பாடுகள் பிப்ரவரி 15ஆம் தேதி வரை நீடிப்பு .
பிப்ரவரி 15ஆம் தேதி வரை எதற்கெல்லாம் கட்டுப்பாடு
பொழுதுபோக்கு மற்றும் கேளிக்கை பூங்காக்கள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி.
கல்லூரிகளுக்கு அனுமதி
அரசு மற்றும் தனியார் பல்கலை கழகங்கள், கல்லூரிகள், தொழிற்பயிற்சி மற்றும் பயிற்சி நிலையங்கள் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் செயல்பட அனுமதி.
உள் அரங்குகளில் நடத்தப்படும் கருத்தரங்கங்கள், இசை, நாடகம் போன்ற நிகழ்ச்சிகள் 50 சதவீத பார்வையாளர்களுடன் செயல்பட அனுமதி என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.