தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களில் 40 கிராம் வரை நகை கடன் தள்ளுபடி குறித்த அரசாணை இந்த வாரத்தில் வெளியாகும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்தார்.
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கூட்டுறவு சங்கங்களில் தங்க நகை கடன் தள்ளுபடி குறித்த அரசாணை தயாராக இருப்பதாக கூறினார். அரசாணை வெளியானதும் 5 சவரன் மற்றும் அதற்கு குறைவாக நகை அடமானம் வைத்து இருப்பவர்களிடம் திருப்பி தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.
மேலும் இது பற்றி அவர் பேசுகையில், 40 கிராகிராமிற்கு கீழே வைத்திருக்கும் அனைவருக்கும் 40 கிராம் வரை தள்ளுபடி என்பதை உறுதிப்படுத்தி, அதற்குரிய அரசாணைகள் ரெடியாகி கொண்டிருக்கிறது. இந்த வாரத்திற்குள் ரெடியான உடனே நகைகளை உரிமையாளர்களிடம் கொடுப்பதற்கு மாநில முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார். தீபாவளியை முன்னிட்டு நியாயவிலைக் கடைகள் 1ஆம் தேதி முதல் 3 நாட்கள் முழு நேரமும் செயல்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். பண்டிகை காலத்தில் பொருட்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.