தைப்பூச திருவிழாவை முன்னிட்டு நாளை பொதுவிடுமுறை அறிவிக்க தமிழக உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் முருகனின் அறுபடை வீடுகளில் வருடம் தோறும் தைப்பூச திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவது உண்டு. மேலும் பக்தர்கள் முருகனுக்கு நேர்த்திக் கடன் செய்வதும் உண்டு. ஆனால் வருடந்தோறும் நடைபெறும் தைப்பூச திருவிழாவிற்கு தமிழக அரசு பொது விடுமுறை கிடையாது.
இந்நிலையில் தமிழகத்தில் நாளை தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பொது விடுமுறை அளிக்கப்படுவதாகவும், தைப்பூசத் திருவிழா நாளை அரசு பொது விடுமுறை பட்டியலில் சேர்க்க உத்தரவிட்டுள்ளதாகவும் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் நாளை வடலூர் ராமலிங்க அடிகளார் நினைவு தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.