தமிழகத்தில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 59-லிருந்து 60 ஆக உயர்த்தி தமிழக அரசு கடந்த பிப்ரவரி மாதம் அரசாணை வெளியிட்டது. அது அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் சென்னை மாநகர போக்குவரத்து பணியாளர்கள் ஓய்வு பெறும் வயதை 59- ல் இருந்து 60 ஆக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. அரசு பணியாளர்களின் ஓய்வுபெறும் வயது உயர்த்தப் பட்ட நிலையில் மே 31-ஆம் தேதி வயது முதிர்வு காரணமாக பணி ஓய்வு பெரும் பணியாளர்களுக்கு 60 வயது வரை பணி நீட்டிப்பு செய்து மாநகர் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
Categories