தமிழக அரசு துறையில் பணியாற்ற அனுப்பப்படும் பட்டியலின் செல்லுபடி காலம் ஓராண்டாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசுத்துறைகளில் காலியிடங்கள் உள்ளன. அந்த காலி பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அலுவலகங்களில் இருந்து அனுப்பப்படும் பட்டியலில் செல்லுபடியாகும் 6 மாதங்களிலிருந்து ஓராண்டாக நீட்டிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, செய்தித்தாள்களில் விளம்பரம் செய்து நேரடியாக விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.
அவற்றை பரிசீலித்து தேர்வு செய்ய அவகாசம் தேவைப்படுகிறது. அதனால் பரிந்துரைப் பட்டியலில் செல்லுபடி காலம் ஓராண்டாக உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் தமிழக அரசு துறையில் வேலை வாய்ப்பு பெற வேண்டும் என்று விரும்புபவர்கள் உங்கள் விண்ணப்பங்களை உரிய இணையதளத்தில் அனுப்பலாம்.