தமிழக நிதித்துறை செயலாளர் அனைத்து அரசு அலுவலகத்திற்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
தமிழகம் முழுவதும் ஓய்வூதியதாரர்கள் ஓய்வூதியம் பெறுபவர்கள், குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள் என இரண்டு வகையாக இருக்கின்றார்கள். இவர்கள் ஆண்டுதோறும் வாழ்வு சான்றிதழை வழங்க வேண்டும். தமிழக அரசு எந்த துறையில் அவர்கள் பணிபுரிந்தார்களோ அந்தத் துறையைச் சார்ந்த அலுவலகங்களில் வாழ்வு சான்றிதழை வழங்க வேண்டும். அப்படி வழங்கினால் தான் அவர்களுக்கான ஓய்வூதியம் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும். ஆனால் தற்போது கொரோனாவால் ஏற்பட்டுள்ள அசாதாரணமான சூழல் காரணமாக இதற்க்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவிவரும் இது போன்ற காலத்தில் அவர்களுக்கு மேலும் சில பிரச்சினைகளை ஏற்பட்டு விடும் என்பதால் ஓய்வூதியதாரர்கள் வாழ்வு சான்றிதழை அளிப்பதற்காக இந்த ஒரு ஆண்டுக்கு விலக்கு அளிக்கப்படுவதாக நிதித்துறை செயலாளர் ஒரு சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறார். அந்த சுற்றறிக்கை அனைத்து அரசுத்துறை செயலாளர்கள், அரசுத் துறை அலுவலகம், காவல் துறை அலுவலகங்கள் என அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக பல லட்சம் ஓய்வூதியதாரர்கள் பலனடைகிறார்கள்.