தமிழகத்தில் அரசுப் பேருந்துகளில் ஏற்பட்ட விபத்துகள் குறித்த விவரங்களை அளிக்க டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.தமிழகத்தில் அரசு பேருந்து விபத்தில் சிக்கி பல பேர் உயிரிழப்பது மற்றும் படு காயம் அடைவது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளில் அரசு போக்குவரத்து பேருந்துகளால் ஏற்பட்ட விபத்துக்கள் மொத்தம் எத்தனை? விபத்தில் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர்?என்ற விவரங்கள் அனைத்தையும் சமர்ப்பிக்குமாறு அனைத்து மாவட்ட எஸ்பிகள் மற்றும் காவல் ஆணையர்களுக்கு தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
Categories