Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் கடைகள் அடைப்பு – திடீர் அறிவிப்பு …!!

கொரோனா பரவளின் தொடக்க காலத்தில் சென்னையில் வேகமாக வைரஸ் பரவ காரணமாக இருந்ததாக சொல்லப் பட்ட கோயம்பேடு மார்க்கெட் திருமழிசைக்கு மாற்றப்பட்டது. ஆனால் அங்கு இந்த மார்க்கெட்டில் சரியான வியாபாரம் இல்லாததை காரணம் காட்டி வணிகர்கள், வியாபாரிகள் இதனை மீண்டும் கோயம்பேடுக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் துணை முதல்வரை சந்தித்து வணிகர் பேரமைப்பு ஆலோசனை மேற்கொண்டது.

இருந்தும் தமிழக அரசு இது குறித்து அறிவிப்பு வெளியிடாததால் தற்போது தமிழகம் முழுவதும் மூடப்பட்ட மார்கெட்டுகள் மற்றும் கோயம்பேடு மார்க்கெட்டை திறக்க வலியுறுத்தி வணிகர் பேரமைப்பு சார்பாக போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னை கோயம்பேடு மற்றும் மாவட்டங்களில் உள்ள சந்தைகளை திறக்க வலியுறுத்தி வரும் திங்கட்கிழமை ஆகஸ்ட் 10ம் தேதி தமிழகத்தில் உள்ள காய்கறி கடைகள் அனைத்தும் மூடப்படும் என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவித்துள்ளது. திறக்கப்படால் அரசின் விதிமுறைகளை முறையாக பின்பற்றப்படும் எனவும் வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |