இன்று முதல் மே 15ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் கடைகள் அடைக்கப்படும் என்று வணிகர் சங்கம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தொற்றை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்ற அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. பெரிய வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் உடன் அனைத்து கடைகளிலும் வணிகம் நடத்த அனுமதிக்க வேண்டும் என வணிகர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. இதையடுத்து தற்போது புதிய அறிவிப்பை வணிகர் சங்கம் அறிவித்துள்ளது. அதில் 50 சதவீத வாடிக்கையாளர்களோடு கடைகளை நடத்த அனுமதி வழங்கவில்லை என்றால் அத்தியாவசிய பொருள்கள் விநியோகத்தை அரசு பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். இல்லையெனில் இன்று முதல் மே 15ம் தேதி வரை தமிழகம் முழுவதும் தொடர் கடையடைப்பு செய்யப்படும் என தெரிவித்துள்ளனர்.