தமிழகம் முழுவதும் கடைகளில் நின்று பணியாற்றும் ஊழியர்களுக்கு இருக்கைகள் வழங்குவதற்காக சட்ட முன்வடிவை அமைச்சர் திட்டக்குடி கணேசன் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். தமிழகத்தில் பல விதமான கடைகள் மற்றும் அனைத்து நிறுவனங்களிலும் பணியாற்றும் ஊழியர்கள் வேலை நேரம் முழுக்க நிற்க வைக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது. அதன் விளைவாக ஊழியர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்படுகின்றது.
இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் இருக்கையில் அமர்ந்து வேலை பார்க்கலாம் என்ற சட்ட முன்வடிவை கொண்டுவந்துள்ளது. ஏற்கனவே அரசானது 1947 ஆம் ஆண்டு தமிழ்நாடு கடை மற்றும் நிறுவனங்கள் சட்டத்தில் திருத்தம் செய்து சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டது. இதன் மூலம் கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணியாளர்கள் அமர்ந்து வேலை பார்க்கலாம். இந்த சட்ட முன்வடிவு ஊழியர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.