தமிழகம் முழுவதும் கடைகளில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வேலைக்கு அமர்த்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. தற்போது பண்டிகை காலங்களில் குழந்தைகள் ஜவுளி கடைகள், உணவகங்கள் உட்பட வர்த்தக நிறுவனங்களின் ஈடுபடுகின்றன. இதனை தடுப்பதற்காக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதை மீறி கடைகளில் குழந்தைகளை வேலைக்கு அமர்த்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது. கடந்த சில நாட்களாகவே குழந்தைத் தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அரசு அதனைத் தடுப்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.