Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் கட்டணம் உயர்வு….? மக்களே ரெடியா…? வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் பாதிப்பு படிப்படியாக குறைந்ததால் பள்ளிகள் திறக்கப்பட்டு மீண்டும் வழக்கம்போல வகுப்புகள் தொடங்கியது. இதனையடுத்து தேர்வுகளும் முடிவடைந்து தற்போது மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் 2523 தனியார் பள்ளிகளுக்கு புதிய கட்டணம் நிர்ணயம் செய்யப்பட உள்ளதாக தமிழக அரசின் கட்டணம் நிர்ணய குழு அறிவித்துள்ளது. இந்த புதிய கட்டணம் நிர்ணயத்தால் தனியார் பள்ளி கட்டணம் 10 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய கட்டணம் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |