Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் கட்டுப்பாட்டு பகுதிகளில் மேலும் கட்டுப்பாடுகள்…. அரசு அதிரடி ….!!!!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் கடந்த இரண்டு நாட்களாக ஆலோசனை நடத்தி வந்தார். அந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவது மற்றும் பள்ளிகள் மூடுவது குறித்த கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி சற்றுமுன் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் நாளை முதல் இரவு 10 மணி முதல் காலை  5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது.

இந்நிலையில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே அனுமதி. கட்டுப்பாட்டுப் பகுதிகளில் அத்தியாவசிய பணிகள் தவிர இதர சேவைகளுக்கு அனுமதி கிடையாது. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தொற்று  பரவலை தடுக்க, வீடு வீடாக சென்று கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

Categories

Tech |