தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் பலர் கணித பாடங்களை படிப்பதிலும், தேர்வு எழுதி மதிப்பெண் பெறுவதிலும் மிகவும் பின்தங்கி உள்ளனர் என்பது ஆய்வு மூலம் பள்ளிக்கல்வித்துறை கண்டறிந்துள்ளது. இதற்கு ஆசிரியர்கள் கணித பாடத்தை சரியாக நடத்தவில்லை என்று காரணமாக கூறப்படுகிறது. எனவே மாணவர்களுக்கு பதில் முதலில் ஆசிரியர்களுக்கு கணித பயிற்சி வழங்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைந்த கல்வி திட்ட இயக்குனர் சுதன் மேற்கொண்டு வருகிறார்.
அவரது உத்தரவின்படி, வருகின்ற ஜனவரி 20 மற்றும் 22 ஆம் தேதிகளில் அரசு பள்ளி கணித ஆசிரியர்களுக்கு ‘மகிழ் கணித’ என்ற பெயரில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. அதனை தொடர்ந்து மாணவர்கள் கணித பாடத்தை பயமின்றியும், எளிதாகவும், மகிழ்ச்சியாக கற்க வேண்டும். இதற்கு ஆசிரியர்கள் மகிழ்ச்சியாக பாடம் நடத்த வேண்டும். அவ்வாறு பாடம் நடத்தும் முறை எப்படி என்பதை துறை சார்ந்த வல்லுனர்கள் ஆசிரியர்களுக்கு ஆன்லைன் மூலம் கற்றுத் தர உள்ளனர். இந்த பயிற்சி வகுப்பில் ஆசிரியர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.