தமிழகம் முழுவதும் கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பான திட்டத்தை இரண்டு வாரங்களில் தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. தமிழக அரசு சீமை கருவேல மரங்களை அகற்ற 6 மாதங்கள் அவகாசம் கோரியது. இந்நிலையில் அதை ஏற்க மறுத்து இரண்டு வாரங்களில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை இரண்டு வாரத்திற்கு ஒத்தி வைத்தது. கடந்த 2017 ஆம் ஆண்டு சீமை கருவேல மரங்களை அகற்ற நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.
Categories