கலை-அறிவியல் கல்லூரிகளில் பி.காம். 2-ம் ஆண்டு நேரடி சேர்க்கையை பின்பற்ற வேண்டும் என்று கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை, கல்லூரிக் கல்வி இயக்குனர் ஈஸ்வரமூர்த்தி, அனைத்து கல்லூரிக்கல்வி இணை இயக்குனர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது,தமிழகம் முழுவதும் உள்ள கலை அறிவியல் கல்லூரிகளில் பி.காம் 2-ம் ஆண்டு நேரடி சேர்க்கையை பின்பற்ற வேண்டும் என்று கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. வணிகவியல் பயிற்சி டிப்ளமோ முடித்த மாணவர்களை பி.காம் 2-ம் ஆண்டில் நேரடியாக சேர்க்க கலைக் கல்லூரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில், சில கல்லூரிகள் அதனை செயல்படுத்தவில்லை என்று புகார்கள் வந்துள்ளதால், கல்லூரி நிர்வாகங்கள் இதனை உடனடியாக அமல்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.