தமிழகத்தில் அனைத்து கல்லூரிகளுக்குமான மாணவர் சேர்க்கைக்கு வரும் 26ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. 100 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியபோது, ‘பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் வரும் 22ம் தேதி மாணவர்களுக்கு அனுப்பிவைக்கப்படும் என ஏற்கெனவே, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். பொறியியல், கலைக்கல்லூரி அனைத்திற்குமான மாணவர் சேர்க்கைக்கு வரும் 26ம் தேதி முதல் ஆன்லைனின் விண்ணப்பிக்கலாம் . ஆகஸ்ட் 24ம் தேதி இதற்கு அவகாசம் வழக்கப்பட்டுள்ளது’ என்றார்.