Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்களுக்கு…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலை வேகமாக பரவி வருவதால் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஜனவரி 31-ஆம் தேதி வரை அரசு விடுமுறையை அறிவித்துள்ளது. இதனால் கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகளை நேரடி முறையில் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் உயர் கல்வித்துறை ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வுகளை நடத்த அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி பிப்ரவரி மாதம் முதல் செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் முறையில் நடைபெற உள்ளது. மேலும் மாணவர்களுக்கு தேர்வு எழுத தேவையான வழிகாட்டு நெறிமுறைகளும் ஆன்லைன் வாயிலாக வெளியிடப்பட்டுள்ளது. எனவே மாணவர்கள் செமஸ்டர் தேர்வை சரியான நேரத்தில் எழுத தொடங்க வேண்டும். பின்னர் மின்னஞ்சல் மற்றும் வாட்ஸ் அப் மூலம் தேர்வெழுதிய விடைத்தாள்களை அனுப்பவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் விடைத்தாளில் பெயர், பாட பெயர், பதிவு எண், பாட குறியீடு ஆகியவற்றை ஒவ்வொரு பக்கத்திலும் சரியான முறையில் குறிப்பிட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் இந்த ஆன்லைன் தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்கும் விதமாக தமிழக உயர்கல்வித்துறை அஞ்சல் வாயிலாக அனுப்பும் விடைத்தாள்களும், மின்னஞ்சல் மற்றும் வாட்ஸ்அப் வாயிலாக அனுப்பும் விடைத்தாள்களும் ஒரே மாதிரியாக இருந்தால் மட்டுமே விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |