Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்…. “காசு எடுத்து செல்ல தடை?”…. தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் மாநில தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் மாநிலம் முழுவதும் போதை பொருட்கள், மது, ஆயுதங்கள் போன்றவற்றை எடுத்து சென்றால் பறிமுதல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ரொக்கமாக ரூ.50 ஆயிரம் தொகை வரை எடுத்து செல்லலாம். ரூ.10 ஆயிரம் மதிப்பு வரையிலான பரிசுப்பொருட்களை எடுத்துச் செல்லலாம். ரூ.50,000-க்கு மேல் எடுத்து சென்றால் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். இல்லையென்றால் பறிமுதல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |