ஈரோடு மார்க்கெட்டிற்கு காய்கறி வரத்து குறைந்துள்ளதால் அனைத்து காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி ரூபாய் 60 க்கு விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த காய்கறி மார்க்கெட்டில் மாநகர் மட்டுமல்லாமல் மாவட்டத்தில் உள்ள பிற பகுதி மக்களும், மளிகைகடை வியாபாரிகளும், மொத்தமாகவும், சில்லறையாகவும், வாங்குவார்கள்.
ஈரோடு வஉசி மைதானத்தில் நேதாஜி தினசரி மார்க்கெட் தற்காலிகமாக இயங்கி வருகிறது. இது புரட்டாசி மாதம் என்பதால் காய்கறிகளின் நுகர்வு அதிகமாக உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. அதனால் காய்கறி மகசூல் குறைந்து காணப்படுகிறது. எனவே நேதாஜி தினசரி மார்க்கெட்டிற்க்கு அனைத்து காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளது. இதனால் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. போன வாரத்தை விட இந்த வாரம் அனைத்து காய்கறிகளின் விலையும் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. காய்கறி விலை உயர்வால் ஏழை எளிய மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.