Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் காலையிலேயே…. மக்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்து வந்த நிலையில் மீண்டும் புதிய உச்சம் தொட்டுள்ளது. தொடர்ந்து விலை குறைந்து வந்ததால் வாகன ஓட்டிகள் சற்று நிம்மதி அடைந்தனர். ஆனால் கடந்த 28 ஆம் தேதியில் இருந்து பெட்ரோல் விலையும், கடந்த 24 ஆம் தேதி முதல் டீசல் விலை மீண்டும் உயரத் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்நிலையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை உச்சத்தில் உள்ளது. பெட்ரோலை பொறுத்தவரையில் லிட்டருக்கு 26 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.49- க்கும் , ஒரு லிட்டர் டீசல் 34 காசுகள் அதிகரித்து ரூ.95.93- க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இது வாகன ஓட்டிகள் மத்தியில் அதிர்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.

Categories

Tech |