Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் காலை 6 முதல் இரவு 7 மணி வரை காய்கறி கடைகள் இயங்க அனுமதி: தமிழக அரசு!!

தமிழகம் முழுவதும் மே 11 தேதி முதல் காய்கறி கடைகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை திறக்க அனுமதி வழங்கியுள்ளது.

நாடு முழுவதும் 46 வது நாளாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த நிலையில் மத்திய அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகள் படி, கடந்த 4 ம் தேதி முதல் தமிழகத்தில் தனிகடைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டது. மேலும், ஊரடங்கு முடிந்ததும் அரசு பேருந்துகள் இயங்க அனுமதி வழங்கியுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் மேலும் சில ஊரடங்கு தளர்வுகளை அமல்படுத்தியுள்ளது. அவை பின்வருமாறு,

* சென்னையில் தனியார் நிறுவனங்கள் 33% பணியாளர்களுடன் காலை 10.30 முதல் மாலை 6 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
*மற்ற பகுதிகளில் தனியார் நிறுவனங்கள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படலாம்.
* பெட்ரோல் பங்குகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும்
* தேசிய நெடுஞ்சாலைகளில் பெட்ரோல் பங்குகள் 24 மணி நேரமும் செயல்படலாம்

இந்த அனைத்து தளர்வுகளும் மே 11 முதல் நடைமுறைக்கு வரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட அனைத்து தளர்வுகளும், தடைகளும் மறு உத்தரவு வரும்வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |