தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 மாநகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் மொத்தம் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. இதற்காக கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் பிப்…4ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.
இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பரப்புரை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை பரப்புரை மேற்கொள்ளக்கூடாது என்று உத்தரவிடப்பட்டிருந்தது. தற்போது இரவு 10 மணி வரை பரப்புரை செய்ய அனுமதி வழங்கியுள்ளது. சாலை நிகழ்ச்சிகள், சைக்கிள் பேரணி, ஊர்வலங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையும் தளர்த்தப்பட்டுள்ளது.