Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் கால அவகாசம் நீட்டிப்பு…. முதல்வர் அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டுள்ளது.

அதன் காரணமாக கடந்த மாதம் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனாலும் கொரோனா பாதிப்பு குறைந்த பாடில்லை. அதன் காரணமாக தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மே 10 முதல் மே 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதில் பலத்த  கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் சாலை வரை கட்டணம் செலுத்த 3 மாதம் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. சிட்கோ நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய மனைவிலை செவன் வாடகை செலுத்த மேலும் ஆறு மாதம் அவகாசம் நீட்டிப்பு. மே மாதத்தில் காலாவதியாகும் ஆட்டோ மற்றும் கால் டாக்ஸி வாகனங்களுக்கான காப்பீடு செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Categories

Tech |