Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்…. கிளப்களில் பதிவுத்துறை அதிகாரிகள் சோதனை செய்யலாம்… ஐகோர்ட் அதிரடி!!

தமிழகம் முழுவதும் உள்ள பொழுதுபோக்கு கிளப்களில் பதிவுத்துறை அதிகாரிகள் சோதனை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போலீஸ் ரெய்டு நடத்த தடை விதிக்க கோரி கிளப் உரிமையாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்தவழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது  தமிழ்நாடு முழுவதும் உள்ள பொழுதுபோக்கு கிளப்களில், பதிவுத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொள்ள வேண்டும். கிளப்புகள் மீது கிரிமினல் வழக்குகள் இருந்தால் பதிவை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கிளப்கள், சொசைட்டிகளின் ஆய்வு செய்வது காவல் துறை அதிகாரிகளின் கடமை என்று நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.. மேலும் போலீஸ் ரெய்டு நடத்த தடை கோரி கிளப் நிறுவனம் தொடர்ந்த வழக்கை அவர் தள்ளுபடி செய்தார்.

 

Categories

Tech |