Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் குடிநீர் தரத்தை உறுதி செய்ய…. ஆட்சியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் மழைக்கு பிந்தைய நோய் தொற்றுகளை தடுக்க குடிநீரின் தரத்தை உறுதி செய்ய அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், பருவ மழைக்கு முன்பு மழை பெய்யும் போது, மழைக்கு பின்பு என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது பற்றி ஏற்கனவே சுகாதாரத்துறை சார்பாக அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது. மழை நீர் வடிந்த இடங்களில் பிளீச்சிங் பவுடர்கள் மற்றும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

மருத்துவ முகாம்கள் நடத்துவது ஒரு பக்கம் இருந்தாலும், மக்களுக்கு வினியோகிக்கப்படும் தண்ணீரில் உரிய அளவு குளோரின் கலந்து பாதுகாப்பான நீரை வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும்.  தண்ணீரில் ஏற்படும் மாசால் வயிற்றுப்போக்கு, கணைய அழற்சி, மஞ்சள் காமாலை ஆகிய நோய்கள் தீவிரமாக பரவ அதிக வாய்ப்புள்ளது. எனவே அதனை கருத்தில் கொண்டு குடிநீரில் பாதுகாப்பை முறையாக கண்காணிக்க வேண்டும்.

அதுமட்டுமல்லாமல் கொசுக்கள் மூலமாக பரவும் சிக்குன் குனியா, டெங்கு, மலேரியா போன்ற பாதிப்புகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. மழை காலங்களில் நுரையீரல் சார்ந்த நோய்களும், சேற்றுப் புண்களும் ஏற்படக்கூடும். தரமற்ற உணவுகளால் உடல் உபாதைகள் ஏற்படவும் வாய்ப்பு உண்டு.
அவற்றை தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் விரிவாக மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

Categories

Tech |