தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. சென்னை கலைவாணர் அரங்கில் உள்ள மூன்றாவது மாடியில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த வருடத்தின் முதல் கூட்டத்தொடர் என்பதால் கவர்னர் ஆர்.என்.ரவி உரையாற்றுகிறார். அவரது உரையில் புதிய அறிவிப்புகள் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடரில் மகளிருக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. சட்டமன்றத் தேர்தலின் போது திமுகவின் பிரதான தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக அறியப்பட்ட மகளிருக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். இந்த செய்தி குடும்பத் தலைவிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.