குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதில் தி.மு.க மட்டும் 130க்கும் மேற்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக ஆட்சி அமைத்துள்ளது. சட்டப்பேரவை தேர்தலின்போது திமுக அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
திமுக ஆட்சி அமைந்து ஒன்ற சுமார் ஒன்பது மாதங்கள் ஆன நிலையில், அந்த திட்டம் குறித்த அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இதனை அ.தி.மு.க, பா.ஜ.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வந்தனர். இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் வருகிற 5ஆம் தேதி மாலை 5 மணிக்கு அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் நிதி நிலை மற்றும் வேளாண் அறிக்கைகளுக்கு ஒப்புதல் அளிப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. மேலும் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் உரிமை தொகை திட்டத்திற்கு நிதி ஒதுக்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.