Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் குறையும் கட்டணம்…. அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்…..!!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் சுற்றுலாத்துறை அமைச்சர் மதி வேந்தன் இன்று ஆய்வு மேற்கொண்டார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர்,தமிழகம் முழுவதும் சுற்றுலா துறையின் கீழ் செயல்பட்டு வருகின்ற விடுதிகளோடு கூடிய உணவகங்களில் சுற்றுலா பயணிகள் தங்கும் அறைக்கான கட்டணத்தை அதிக அளவில் இல்லாமல் குறைப்பதற்கு அரசு முடிவு செய்துள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழ்நாடு ஹோட்டல்களுக்கு அருகில் உள்ள திறந்த வெளி இடங்களில் திறந்தவெளி உணவகங்களை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தென்னிந்திய உணவுகள் மட்டுமல்லாமல் பல இந்திய உணவுகளை விற்பனை செய்யவும், அதற்காக திறமையான சமையல் மாஸ்டர்களை நியமித்து வருவதாகவும் கூறியுள்ளார். மேலும் தமிழ்நாடு ஹோட்டல்களுக்கு அருகில் உள்ள இடங்களில் பூங்காக்கள் அமைக்கப்படும். நடைப்பயிற்சி மேற்கொள்ளும் வசதிகளும் செய்யப்படும். தமிழகம் முழுவதும் உள்ள விடுதியுடன் கூடிய அரசு சுற்றுலா உணவகங்களை இணையத்திலேயே பயணிகள் முன்பதிவு செய்யும் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |