தமிழகம் முழுவதும் தனியார் ஆய்வகங்கள் கொரோனா பரிசோதனைக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. தனியார் ஆய்வகங்களில் வெளியாகும் முடிவுகளின் தரவுகளை, சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும்.
கொரோனா பரிசோதனைக்கு முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் 400 ரூபாயும், காப்பீடு திட்டம் அற்றவர்களுக்கு 700 ரூபாயும், வீட்டிற்கு சென்று பரிசோதனை செய்ய கூடுதலாக 300 ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதனால் தனியார் ஆய்வகங்கள் அரசு குறிப்பிட்டுள்ள இந்த கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆய்வகங்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரித்துள்ளது.