Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றவர்களுக்கு…. வெளியான செம ஹேப்பி நியூஸ்…..!!!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் திமுக கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் தங்க நகைகள் மீது பெற்ற நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். அதனை நிறைவேற்றும் வகையில் ஆட்சிக்கு வந்தவுடன் நிபந்தனைகளின் அடிப்படையில் நகைக்கடன்களை தள்ளுபடி செய்ய முடிவு செய்யப்பட்டது. அந்த அடிப்படையில் தற்போது நிபந்தனைகளின்படி தகுதியானவர்களுக்கு மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அரசு அறிவித்தது.

இதையடுத்து பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டவர்கள், நகை கடனை முழுமையாக செலுத்தியவர்கள், கூட்டுறவு சங்க ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அரசு ஊழியர்களுக்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் நகைக்கடன் வைத்தவர்களில் 13 லட்சம் பேர் கடன் தள்ளுபடிக்கு தகுதியானவர்கள் பட்டியலில் இருக்கின்றனர். இதனிடையில் நகைக்கடன்களுக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்ட நிலையில் நகைகள் எப்போது திரும்ப வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத பகுதிகளில் அடகு வைக்கப்பட்ட நகைகளை திரும்ப வழங்கும் பணிகள் முன்பே தொடங்கி விட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் இறுதியில் திரும்ப வழங்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார். தற்போது நகர்புறங்களில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்த நிலையில் நகைக் கடன் தள்ளுபடியானது விரைவில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |