தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு வாக்குறுதி கொடுத்தபடி கூட்டுறவு சங்கங்களில் பெற்ற நகைக்கடன்களை தள்ளுபடி செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டது. கொரோனா காலத்தில் அரசுக்கு நிதி நெருக்கடி நிலையில் அனைவரது கடன்களையும் தள்ளுபடி செய்ய இயலாத சூழல் ஏற்பட்டது. அப்போது நிபந்தனைகளின்படி தகுதி பெறுபவர்களுக்கு மட்டும் நகைக் கடன் தள்ளுபடி வழங்க முடிவு செய்யப்பட்டு, நடைக் கடன் பெற்றவர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டது. அதன்படி தங்க நகைக்கடன் தள்ளுபடி பெற தகுதியானவர்கள் மற்றும் தகுதியற்றவர் பட்டியல் வெளியிடப்பட்டது.
இதற்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். முன்பாக தேர்தலின் போது நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று பொதுவாக சொல்லி தற்போது நிபந்தனைகள் விதிப்பது நியாயமற்றது என கூறினர். எவ்வித நிபந்தைகள் இன்றியும் அனைவரது கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. அடகு வைத்து இருந்ததில் தகுதியானவர்களுக்கு கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ் வழங்கும் பணிகள் நடைபெற தொடங்கியது. அதன்பின் நகர்ப்புறங்களில் தற்போது தேர்தல் முடிவடைந்த நிலையில், கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது.
ஆகவே தள்ளுபடி தொடர்பாக அரசின் அறிவிப்பு வெளியாகிய நாள் முதல் கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடiன் பெற்றவர்கள் வட்டி கட்டுவதை நிறுத்தி விட்டனர். இந்நிலையில் நகைக் கடன் தள்ளுபடிக்கான சான்றிதழை வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் நகைக் கடன் தள்ளுபடிக்கு முன்னதாக கடன்களுக்கான தொகையை அரசு முன்பாக வழங்க வேண்டும் என்று கூட்டுறவு சங்கங்கள் வலியுறுத்துகின்றனர். இந்த நிலையில் நகைக் கடன் தள்ளுபடி செய்யப்பட்ட தொகையை 4,450 கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு உடனே வழங்க வேண்டுமென அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் வலியுறுத்தியுள்ளார்.