Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் கொரோனா சிகிச்சைக்காக…. 2 ஆயிரம் மருத்துவர்கள் நியமனம்…. அரசு அதிரடி….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் கொரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மருத்துவமனைகளில் படுக்கை வசதி, சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள், ஆக்ஸிஜன் பற்றாக்குறை போன்ற பல தட்டுப்பாடுகள் நிலவுகின்றன.  இதனை சரிசெய்யும் முயற்சியில் தமிழக அரசு தீவிரம் காட்டிவருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்காக 2 ஆயிரம் மருத்துவர்கள் நியமிக்கப்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அதனைப்போலவே கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவ சேவை ஆற்ற 6 ஆயிரம் செவிலியர்களுக்கு தமிழகத்தில் பணி நியமனம் செய்யப்பட்டு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவுட்சோர்சிங் முறை ரத்து செய்யப்பட்டு தமிழக அரசே நேரடியாக பணி நியமனம் வழங்கும் என்றும், தமிழகத்தில் தற்போது வரை 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரநாத் தடுப்பூசிகளை போட்டுக் கொண்டுள்ளனர், தமிழகத்தில் ஒட்டு மொத்தமாக 10 கோடியே 25 லட்சம் டோஸ் கிடைத்ததால் 100 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போட முடியும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.

Categories

Tech |