தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார். கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் பெண்களுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அனைத்து கோயில்களிலும் ஓதுவார், அர்ச்சகர், பூசாரி காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.