Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் கோவில்களில்… சாமி தரிசனத்துக்கு ஆன்லைன் முன்பதிவு…. அரசு அதிரடி….!!!

தமிழகத்தில் உள்ள பெரிய கோவில்களில் சுவாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் ஆன்லைன் மூலமாக டிக்கெட் முன்பதிவு செய்யும் முறை விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதில் முதற்கட்டமாக திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில், ஸ்ரீரங்கம்,மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் திருச்செந்தூர் முருகன் கோவில் உள்ளிட்ட 46 பெரிய கோவில்களில் சுவாமி தரிசனத்திற்கு ஆன்லைன் முறையில் டிக்கெட் முன்பதிவு செய்ய வசதிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அதன்பிறகு படிப்படியாக மற்ற கோவில்களிலும் ஆன்லைன் டிக்கெட் முறையை கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்துள்ளது. கொரோனா காரணமாக ஒரே நேரத்தில் பக்தர்கள் கோவிலில் கூட்டம் கூடாமல் இருக்க இந்த திட்டத்தை தொடங்க அறநிலையத் துறை முடிவு செய்துள்ளது. இது மக்கள் மத்தியில் மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.

Categories

Tech |