திருமணம் செய்யும் மணமக்களின் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருந்தால் அவர்களுக்கு கோவில்களில் திருமண கட்டணம் வசூலிக்கப் படாது என்று அறநிலையத்துறை மானியக் கோரிக்கையின் போது சட்டசபையில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி கோவிலில் திருமணம் செய்யும் மாற்றுத்திறனாளிகள் கட்டணம் இல்லாமல் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற திட்டத்தை இந்த மாதம் எட்டாம் தேதி முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதனையடுத்து சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் மாற்றுத்திறனாளி ஒருவரின் திருமணம் நடந்தது. இதன் மூலமாக தமிழகத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்கள் மற்றும் கோவில்களுக்கு சொந்தமான திருமண மண்டபங்களில் மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்தாமல் திருமணம் செய்து கொள்ளும் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.