இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் அலுவலகத்தில் அமைச்சர் சேகர் பாபு தலைமையில் மண்டல இணை ஆணையர்கள் மற்றும் உதவி ஆணையர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சட்டமன்ற மானியக் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதற்கு முன்பு செய்தியாளர்களிடம் அமைச்சர் சேகர்பாபு, 551 கோயில் திருப்பணிகளுக்கு இதுவரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
புது வருடப் பிறப்பில் கோயில் கோயில் பணியாளர்களுக்கு புத்தாடை வழங்குவது குறித்தும் ஆலோசனை செய்து வருகிறோம். தமிழகத்தில் ஒமைக்ரான் அதிகரித்து வருவதால் அதன் தாக்கம் குறித்து ஆராய்ந்தும், பக்தர்கள் மகிழ்ச்சிக்கு இடையூறு இல்லாமலும் கோயில்களில் கட்டுப்பாடு விதிக்கப்படும். இது தொடர்பாக வரும் 30 மற்றும் 31ம் தேதிகளில் முதல்வர் தலைமையில் துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் மேற்கொள்ளப்படும். அதன்பின் முதல்வர் அறிவிப்பார் என்று தெரிவித்துள்ளார்.