கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் புத்தாண்டு அன்று கோவில்களில் வழிபடுவதற்கு தடை இல்லை என்று அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.
அதன்படி புத்தாண்டை முன்னிட்டு பக்தர்கள் நள்ளிரவு 12 மணிக்கு கோவில்களில் சுவாமி தரிசனம் செய்ய தடை இல்லை. அப்போது தனிமனித இடைவெளி, முககவசம் அணிதல் ஆகிய விதிகளை பின்பற்றி பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்யலாம். இவ்வாறு அரசு கொடுத்துள்ள நோய்த்தடுப்பு வழிமுறைகளை கட்டாயம் பக்தர்கள் பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.