Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் சனிக்கிழமை கிடையாது…. சற்றுமுன் அரசு வெளியிட்ட அறிவிப்பு…!!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் ஒவ்வொரு வாரமும் அனைத்து பகுதிகளிலும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை அன்று தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. அரசு நிர்ணயித்த இலக்கை விட அதிக அளவு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

தடுப்பூசி முகாமிற்கு மக்கள் ஆர்வத்துடன் சென்று தடுப்பூசி செலுத்தி கொள்கின்றனர். இதுவரை 16 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.இந்நிலையில் 17வது மெகா தடுப்பூசி முகாம் புத்தாண்டு காரணமாக சனிக்கிழமை பதிலாக வரும் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |