Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை…. அரசு எடுக்கும் முடிவு என்ன?…..!!!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக மக்கள் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வந்தனர். குறிப்பாக நாட்டின் வர்த்தகம், பொருளாதாரம், உற்பத்தி ஆகிய துறைகளை காட்டிலும் மீட்டெடுக்க முடியாத நாட்களாக மாணவர்களின் கல்வி பதிக்கப்பபட்டு விட்டது என்றே கூறலாம். கொரோனாவின் முதல் மற்றும் 2-வது அலையின் போது பள்ளிகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வந்தது. அவ்வாறு ஆன்லைன் மூலம் மாணவர்கள் பாடத்தை கற்றாலும் பள்ளிக்கு சென்று அங்கு இருக்கும் சூழலில் பாடம் கற்பது மிகவும் சிறந்ததாக விளங்குகிறது. ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் கல்வியை இழந்து வந்தனர்.

இந்த நிலையில் கொரோனா 2-ம் அலையின் இறுதி கட்டத்தை நெருங்கிய அரசு கொரோனா தொற்று சற்று குறைந்த நிலையில் பள்ளிகளையும், கல்லூரிகளையும் மீண்டும் தொடங்கியது. இதையடுத்து மீண்டும் 3-வது அலை பாதிப்பினால் பொங்கல் விடுமுறைக்கு பின் 15 நாட்கள் பள்ளிகள் மூடப்பட்டது. அதன்பின் தமிழகத்தின் அனைத்து பள்ளிகளும் முழுமையாக மீண்டும் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

கடந்த வருடம் செப்டம்பர் மாதம் தொடங்கிய பள்ளிகள் தொடர்ந்து 6 நாட்களும் செயல்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறையின் சார்பாக அறிவித்து இருந்தனர். இதனால் பள்ளிகள் சனிக்கிழமைகளிலும் இயங்கி வருகிறது. தற்போது பொதுத்தேர்வுகள் தொடர்பான அறிவிப்புகள் வெளிவந்த நிலையில் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் மாணவர்களின் வருகை எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஆகவே மீண்டும் முன்பு இருந்ததைப் போன்றே வாரத்தில் இரு நாட்கள் விடுமுறை கொடுக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் சார்பாக பள்ளிக் கல்வித்துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |