தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று ( பிப்.19 ) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு தமிழக அரசு பொது விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. அதாவது பொதுமக்கள் அனைவரும் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை ஓட்டு போட அனுமதிக்க விடுவார்கள். அதன்பிறகு வாக்காளர்களுக்கு அனுமதி கிடையாது என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதேபோல் மாலை 5 மணி முதல் 6 மணி வரை ஒரு மணி நேரம் கொரோனா நோயாளிகளுக்கு வாக்குப்பதிவு செலுத்த அனுமதி வழங்கப்படுகிறது.