தமிழகத்தில் மேலும் சில சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து சேவை மீண்டும் இயக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் குறைந்த அளவிலான பேருந்துகள் மற்றும் ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தமிழகத்தில் மேலும் சில சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னை -கோவை ரயில், சென்னை-நிஜாமுதீன், கோவை- கே எஸ் ஆர், பெங்களூரு, மதுரை-நிஜாமுதீன், புதுச்சேரி- மங்களூரு, புதுச்சேரி-கன்னியாகுமரி, மதுரை-எழும்பூர் இடையே சிறப்பு ரயில்கள் ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் இயக்கப்பட உள்ளன. மேலும் அரக்கோணம் மற்றும் ஜோலார்பேட்டை இடையே முன்பதிவில்லா விரைவு ரயில் ஏப்ரல் 10 முதல் இயக்கப்பட உள்ளது. இந்த அறிவிப்பு ரயில் பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.