தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு ஒவ்வொரு வாரமும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் மாணவர்களின் நலனைக் கருதி 15 முதல் 18 வயது வரையிலான சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. அவர்களுக்கு பள்ளிகளில் தடுப்பூசி செலுத்தப்பட்டுவருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் மட்டுமின்றி அனைத்து முகாம்களிலும் 15 முதல் 18 வயதான சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் உத்தரவிட்டுள்ளார். மேலும் அனைத்து அரசு மையங்களிலும் 39 வாரங்களைக் கடந்த தகுதியுடையோருக்கு பூஸ்டர் டோஸ் போட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.