தமிழகத்தில் சுதந்திர தினத்தன்று கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்று ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஊராட்சி அலுவலகங்களில் தலைமை பொறுப்பு வகிக்கும் கட்சி தலைவர்களும் தங்களது அலுவலகங்களில் தேசியக் கொடியை ஏற்ற சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதன் தொடர்ச்சியாக கிராம சபை கூட்டங்கள் தொடங்கும்.அந்தக் கூட்டத்தில் வரவு செலவு கணக்குகள் வெளியீடு மற்றும் பல்வேறு திட்டங்களுக்கான பயனாளிகள் தேர்வு அரசு திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல் என பல்வேறு தலைப்புகளில் விவாதம் நடைபெற உள்ளது. திட மற்றும் திரவ கழிவு மேலாண்மை,விவசாயம் மற்றும் உழவர் நலத்திட்டங்கள் ஆகியன குறித்து இதில் விவாதிக்கப்படும்.இந்த கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் கலந்துகொள்ளும் போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.