டெல்லி குடியரசுத் தினம் அணி வகுப்பில் இடம்பெற இருந்த தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தியானது இந்த முறை நிராகரிக்கப்பட்டு இருக்கிறது. வ.உ.சி, வேலுநாச்சியார், பாரதியார் போன்றோரை மையமாக வைத்து வாகனம் உருவாக்கப்பட்டது. எனினும் மத்திய அரசின் நிபுணர் குழு இந்த அலங்கார ஊர்திக்கு அனுமதி வழங்கவில்லை.
தமிழக அரசு இது குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியும் கூட அலங்கார ஊர்திக்கு அனுமதி வழங்கப்படவில்லை. புதுடில்லியில் குடியரசு தினம் அலங்கார அணி வகுப்பில் வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் சென்னையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் தமிழக அலங்கார ஊர்திகள் காட்சிப்படுத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
இந்நிலையில் நாடு முழுவதும் இன்று 73-வது குடியரசு தின விழாவானது பல்வேறு சர்ச்சைகளை கடந்து கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் டெல்லி குடியரசு தின அணிவகுப்பு விழாவில் அனுமதி மறுக்கப்பட்ட விடுதலைப் போரில் தமிழ்நாட்டின் பங்கை காட்சிப்படுத்தும் அலங்கார ஊர்தி தமிழ்நாடு முழுவதும் செல்ல இருக்கிறது. இதனை இன்று மதியம் 12 மணிக்கு முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார்.