தமிழகத்தில் கொரோனாவிற்கு பிறகு அடுத்து தாக்குதலாக ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது. இதனையடுத்து ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல கட்டுப்பாடுகளை அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு வரும் விமான பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஏற்கனவே கொரோனா நெருக்கடியான காலகட்டத்தில் தற்காலிகமாக செவிலியர்களை தமிழக அரசு நியமித்த நிலையில் தற்போது தேவையான செவிலியர்களை தற்காலிகமாக நியமிக்க மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா காலத்தில் பணியாற்றிய ஊழியர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். தமிழகத்தில் உள்ள அணைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தடுப்பூசி போட வேண்டும். மேலும் கிராமங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்த அரசு முடிவு செய்து முதல் கட்டமாக ரூ.10.69 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.