தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக கடந்த மாதம் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனாலும் கொரோனா பாதிப்பு குறைந்த பாடில்லை. அதன் காரணமாக தமிழகத்தில் பரவலாக பரவலை கட்டுப்படுத்த இன்று முதல் மே 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதில் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தன்னார்வலர், வயது முதிர்ந்தோர், மாற்றுத்திறனாளி மற்றும் நோயுற்றவர்களுக்கு சேவை வழங்க அனுமதி அளிக்கப் போவதாக முதல்வர் ஸ்டாலின். நிறுவனங்கள் வழங்கும் அடையாள அட்டை மற்றும் ஆவணத்துடன் சென்று சேவையாற்றலாம். வழிபாட்டு தலங்களில் மக்களுக்கு அனுமதி இல்லை. பூஜைகள், பிரார்த்தனை மற்றும் சடங்குகள் தொடரலாம். முழு ஊரடங்கு நாட்களில் குட முழக்கு, திருவிழா நடத்த அனுமதி இல்லை என கூறியுள்ளார்.